Untitled Document
Office Hours:
Monday to Sunday

Call us: 98430 63773


கட்சி தலைமையகம் - சத்யாலயம், No.33, முதல் மாடி, கண்ணதாசன் தெரு, S.S.காலனி, மதுரை - 625010

மக்களை சந்திக்காமல் , மக்கள் தேர்ந்தெடுக்காமல் வீட்டுக்குள் இருந்து பின் வாசல் வழியாக முதல்வர் பதவிக்கு யாரும் வரக் கூடாது என்று அனைந்திந்திய புரட்சித் தலைவர் முன்னேற்ற கழக தலைவர் S.சக்கரவர்த்தி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களை கட்சியின் நிர்வாகிகளோடு தலைவர் S.சக்கரவர்த்தி சந்தித்த போது கூறியது:

எம்ஜிஆர் கொண்டுவந்த கொள்கைகள் எல்லாம் இப்போது இருக்கிற ஆட்சியில் இல்லை. அவரது கொள்கைகளை திரும்ப கொண்டு வந்து எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும். அதற்காக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் மக்களை சந்தித்து பதவிக்கு வரவேண்டும்.

எம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவருவோம்… எம்ஜிஆர் கொள்கைகளை பின்பற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் எங்களோடு கை கோருங்கள்… நமது சின்னம் “இரட்டை விரல்” …  இப்போது நடப்பது எம்ஜிஆர் ஆட்சி இல்லை… இப்படி ஒரு கோஷத்தோடு உருவாகி இருக்கிறது அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்.  அதோடு மக்களை சந்திக்காமல் வீட்டுக்குள் இருந்து பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வரக்கூடாது. மக்களை சந்தித்து அவர்கள் தேர்வு செய்தால் எந்த பதவிக்கும் அழகு” என்றார்.

வீட்டுக்குள் இருந்து பின்வாசல் வழியாக என்று யாரை சொல்கிறீர்கள் என்று கேட்டால்… ” அது உங்களுக்கு தெரியாதா சார்” என்று எதிர் கேள்வி கேட்டு சிரிக்கிறார்.
மதுரையில் தலைமை அலுவலகம்… மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம்… ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் கோவையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம்… இது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்றார் சக்கரவர்த்தி.

நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவராக அனைத்து நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் சேர்ந்து லயன்.பி.சக்கரவர்த்தி அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.

பொது செயலாளராக அகஷ்டின், பொருளாளராக வெங்கடேஷ், துணை தலைவராக சங்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் 30 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களின் அத்தியாவசிய தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மின்சாரம் போன்றவற்றின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். புரட்சித் தலைவர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மேம்படுத்த மேலும் நிதி உதவி ஒதுக்க வேண்டும். இலவச கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கல்விக் கடன் வட்டியில்லாமல் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான மின்சாரம், தண்ணீர் வழங்க வேண்டும். விளை பொருட்களுக்கு கொள்முதலில் நல்ல விலை தர வேண்டும். விளையாட்டு துறையை ஊக்குவிக்க வேண்டும். பூரண மது விலக்கு உடனடியாக அமல் படுத்த வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.