

All India Puratchithalaivar Makkal Munnetra Kazhagam.
எம்.ஜி.ஆர் போன்ற தோற்றம் கொண்டவரான Lion. Dr.P. சக்கரவர்த்தி, எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு நன்கு அறிமுகமானவர். சக்கரவர்த்தி திருமகன் என்ற எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பில், தானே கதாநாயகனாக நடித்து திரைப்படம் வெளியிட்டிருக்கிறார். மற்றுமொரு படத்தின் தயாரிப்பு பணியில் இருக்கிறார். இந்த இடைவேளையில்தான் புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கடந்த 6 ம்தேதி அழைப்பிதழ் போட்டு புதிய கட்சியை மதுரையில் துவக்கியிருக்கிறார்.
- புரட்சித் தலைவர் ஆட்சி அமைத்தல்
- மீண்டும் மக்களாட்சி மலர்ந்திட வைத்தல்
- மீண்டும் நல்லாட்சி நடத்துதல்
- ஊழல் புரிபவர்களை ஒழித்தல்
- குடும்ப அரசியலை விரட்டுதல்
- தமிழர் பண்பாட்டை காப்பாற்றுதல்
- விவசாயிகளின் வாழ்வை செழிக்க வைத்தல்
- ஏழைகளுக்கு எளிய கல்வி கிடைத்திட வைத்தல்.
- அத்தியாவசிய தேவைகள் விலை ஏற்றமில்லாமல் செய்திட வைத்தல்
- மீனவர்கள் வாழ்வை நலம் பெற வைத்தல்
- வணிகர்கள் நலத்தினை காத்திட வைத்தல்
- அண்டை நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தல்
- இளைஞர்களை தொண்டு செய்ய ஊக்குவித்தல்
All India Puratchi Thalaivar Makkal Munnettra Kazhagam,
D.No.33, 1st Floor,
Kannadasan Main Road,
S.S.Colony,
Madurai - 625010
Tamil Nadu
98430 63773